• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குருநானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சீக்கியர்கள் ஊர்வலம்

November 11, 2019

குருநானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற ஊர்வலத்தில் சீக்கிய பக்திப் பாடல்கள் பாடிய படி சீக்கியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குரு நானக் தேவ்ஜியின் 550 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை குருநானக் சிங் சங்கத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை பிரிக்பீல்ட்ஸ் எதிரில் உள்ள குருநானக் சங்கத்தின் முன்பாக சீக்கியர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் துவங்கியது. இதில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள்,பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், மற்றும் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் பஷீர் அகமது மற்றும் கிறிஸ்தவ போதகர்கள் பிரான்சிஸ் ,பால்ராஜ்,சதயூஸ்,எட்வர்டு உள்ளிட்ட பல்வேறு மத தலைவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில், சீக்கிய பக்திப் பாடல்கள் பாடிய படி சீக்கிய குரு இருப்பதை போல், பட்டு துணியால் போர்த்தப்பட்ட பெட்டிக்கு வெண்சாமரம் வீசப்பட்டது.

அதைத் தொடர்ந்து குரு குருநானக்கின் புகழை, கலைக்குழுவினர் பாடிய படி ஆர்.எஸ்.புரம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.இதில் சீக்கிய மதத்தினருக்கான கொடியை கையில் ஏந்தியபடி கோவை,ஈரோடு,சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதகளை சேர்ந்த ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என 500 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் ஊர்வலமாக சென்றனர். ஆண்கள் கைகளில் நீண்ட பட்டை தீட்டப்பட்ட வாள்களை சுழற்றி பல்வேறு சாகச நிகழ்சிகளை நடத்தினர். ஊர்வலம் முடிந்த பிறகு குருவின் பெயரால் அங்குள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது

மேலும் படிக்க