• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெரிய வெங்காயம் விலை விரைவில் குறையும் வியாபாரிகள் நம்பிக்கை

November 8, 2019 தண்டோரா குழு

கோவையில் பெரிய வெங்காயம் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் விலை விரைவில் குறையும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்ஜிஆர் மார்க்கெட் உள்ளன இந்த மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து உள்ளது. தினமும் 700 முதல் 800 டன் வரை பெரிய வெங்காயம் வரத்து இருக்கும். இந்நிலையில் மகாராஷ்டிரா கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

கோவைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது தினமும் 400 டன் மட்டுமே வந்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் முதல் முறையாக பெரிய வெங்காயத்தின் விலை கோவை மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி உச்சத்தைத் தொட்டது. அதன்படி மொத்த விற்பனையில் கிலோ ரூபாய் 70 க்கும் விற்பனை செய்யப்பட்டது சில்லரை விற்பனை 90க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மொத்த விற்பனையில் கிலோ 55க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை வரும் வாரங்களில் படிப்படியாகக் குறையும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.

மேலும் படிக்க