• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியை கண்டித்து 20ந்தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

November 7, 2019 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை இரத்து செய்ய வேண்டும், செயலற்று முடங்கி கிடக்கின்ற கோவை மாநகராட்சியை கண்டித்து 20ந்தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கூறியுள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 சதவீத வரி உயர்வை அமுல்படுத்தினர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வினியோக உரிமையை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதை கண்டித்தும், சுகாதரமற்ற கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும், 100 சதவீத சொத்து வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 20 ந்தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற மாநகர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க