• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டி.ஜி.பி திரிபாதி தலைமையில் காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை

November 7, 2019 தண்டோரா குழு

தமிழ்நாடுகேரளா எல்லையில் மாவோயிஸ்ட் உயிரிழப்பு மற்றும் அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் போலீசார் முன்
ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் அவினாசி சாலையில் காவலர் பயிற்சி பள்ளி மைதனத்தில் உள் அமைந்துள்ள காவலர் விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதி, சிறப்பு அதிரடி படை எஸ்.பி. மூர்த்தி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அண்மையில் தமிழக- கேரளா எல்லையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட எதிரொலியாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கல்லாம் என கருதப்படுகிறது.

மேலும் அயோத்தி தீர்ப்பு வெளியாகும் நிலையில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, கோவை மாநாகர காவல் ஆணையர் சுமித்சரண் உட்பட உயர் அதிகாரிகளுடன் டி.ஜி.பி.திரிபாதி ஆலோசனை நடத்த இருக்கின்றார்.

மேலும் படிக்க