• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அழைத்து வந்த கைது தப்பி ஓட்டம்

November 5, 2019 தண்டோரா குழு

கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விட்டு கேராளாவிற்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடிய குற்றவாளியை கேரள போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் பெரும்பாவூர், ஆலப்புழா மாவட்டம், காயன்குளம் அருகே உள்ள தேசத்தினகம் பகுதியை சேர்ந்தவர் அப்புண்ணி (வயது 35). இவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இவர் காயன்குளம், வளஞ்சநடா,செட்டிகுளங்கரா ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கூலிப்படைகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்று கூறப்படுகிறது. இவர் மீது ஆலப்புழா,கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில்,திருக்குன்னபுழா பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கில் இவரை கைது செய்த கேரள போலீஸார் மாவேலிக்கரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து விட்டு மீண்டும் கேரளாவுக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் மாவேலிக்கராவிற்கு ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் சென்றஅப்புகண்ணி, நீதிமன்றத்துக்கு அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு விட்டு கை கழுவ செல்வதாக சென்ற அப்புண்ணி கண் இமைக்கும் நேரத்தில் ஓட்டலில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆயுதப்படை போலீசார் இதுகுறித்து மாவேலிக்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவேலிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அப்புண்ணியை வலைவீசி தேடி வருகின்றனர்

மேலும் படிக்க