• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியின் பத்தாம் ஆண்டு நிறுவனர் தினவிழா

November 2, 2019 தண்டோரா குழு

கோவையில் கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியில் பத்தாம் ஆண்டு நிறுவனர் தினவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பத்தாம் ஆண்டு நிறுவனர் தினவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா டைனமிக்ஸ் 2019 கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டது. மழலையர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்று நடனம் ,நடிப்பு போன்ற பன்முக திறன்களையும் வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிகள் உணர்வை பிரதிபலிக்கும் அரிய விழாவாக அமைந்தது, இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அப்துல்கலாம் பன்னாட்டு நிறுவனத்தின் அறங்காவலர் ஏபிஜே எம் ஜே ஷேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.

பள்ளியின் நிறுவனர் அருள்ரமேஷ் பேசும்போது
,

கடின உழைப்பே வெற்றிக்கு சமம் ,ஒவ்வொரு நாளையும் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் நம்பிக்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஒழுக்கம் என்பது வீட்டில் தொடங்கி பள்ளிகளிள் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். குழந்தையின் தனித்துவத்தை வளர்த்து அதற்கான விதைகளை விதைக்கிறது நமது பள்ளி என்றும் கூறினார்.

சிறப்பு நிகழ்ச்சியாக பெண் உரிமையை நடன அசைவுகளால் காட்டிய வசனநாட்டியம், வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவூட்டிப் பெருமைப்படுத்திய நாட்டிய நாடகம் ,தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் நடனம், நெகிழிப் பொருள் பயன்பாட்டை தவிர்த்தலை வலியுறுத்தும் நடனம் போன்றவை பார்ப்போர் மனதில் முத்தாய்ப்பாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் கேம்ஃபோர்டு பள்ளியின் நிறுவனர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க