• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற செல்கோ சோலார் நிறுவன கண்காட்சி

November 2, 2019 தண்டோரா குழு

செல்கோ சோலார் நிறுவன கண்காட்சி கோவை தனியார் அரங்கில் துவங்கப்பட்டது.

செல்கோ சோலார் நிறுவன கண்காட்சி இன்று கோவை ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சைமா ஹாலில் நடைபெற்றது. இதில் பல இயந்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் பால்கறவை இயந்திரம், தையல் இயந்திரம், அரிசி மாவு இயந்திரம், மர அறவை இயந்திரம், கரும்பு சாறு இயந்திரம், மீனவர் விளக்கு இயந்திரம், அரிசி கல் நீக்கும் இயந்திரம், மாவு திரிக்கும் இயந்திரம், முட்டை அடைக் காக்கும் இயந்திரம், புளி விதை நீக்கும் இயந்திரம் போன்ற நடுத்தர மக்களின் வாழ்வாதார இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதில் பேசிய விக்னேஸ்வரன்,

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கண்காட்சியை அமைத்துள்ளோம். இந்த கண்காட்சியை ஐடிபிஐ வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, யூனியன் பேங் ஆப் இந்தியா, கரூர் வைசியா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, செளவ்த் இந்தியன் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஜனா வங்கி, தமிழ்நாட் மெர்கண்டைல் பேங்க் போன்ற வங்கிகளுடன் இணைந்து நடத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் இதில் சிறப்பு விருந்தினராக எல்இடி மாவட்ட மேலாளர் வெங்கட்டரமணன், இசக்கி முத்து மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க