• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தலாக் கூறி விவாகரத்து கேட்ட கணவர் மீது வழக்கு பதிவு

October 31, 2019 தண்டோரா குழு

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து 4 மாதங்களிலேயே தலாக் மூலம் விவாகரத்து கேட்ட கணவர் மீது திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை அன்னூர் கே.கே. வீதியை சேர்ந்தவர் முகமது செரீப், இவரது மகன் முகமது அலி (32). மனைவி வாஜியா (24) போத்தனூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் வாஜியா போத்தனூர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் முகமது அலி தன்னை திருமணம் செய்து கொண்டு வரதட்சனை கேட்டு மிரட்டுவதாகவும், முகமது அலி மற்றும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் வாஜியாவை பிடிக்கவில்லை எனத் தெரிவித்து, தலாக் என கூறி விவாகரத்து கேட்டு, வாஜியாவை போத்தனூர் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து போத்தனூர் போலீஸார் முகமது அலி மற்றும் அவரது உறவினர்களான பானு, ஜக்காரியா, பாஷா, நிஷா, அன்வர், உள்ளிட்ட ஏழு பேர் மீது வரதட்சனை கொடுமை 498(A) மற்றும் இஸ்லாமிய பெண் திருமண பாதுகாப்பு சட்டம் (3r/w4 ) – 2019. பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கானது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க