• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது – ரஜினி

October 29, 2019 தண்டோரா குழு

சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே 25ந்தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் விழுந்துள்ளான். அவனை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாக அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். சுஜித்தின் மரணம் தமிழக மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில்,

சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

மேலும் படிக்க