• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தை சுஜித் உயிருடன் மீண்டுவர நான் பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி

October 28, 2019 தண்டோரா குழு

குழந்தை சுர்ஜித்தை பற்றி முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு நான்காவது நாளாக 77 மணி நேரத்தை கடந்து முயற்சி எடுத்து வருகிறது.

இரண்டு வயது குழந்தை சுஜித் மீட்பதற்கான முழு முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில்,

’வீரமிக்க சிறுவன் சுர்ஜித் வில்சனுடன் எனது பிரார்த்தனைகள் இணைந்துள்ளது. அவனை ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். சிறுவனை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க