• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளியின் தனியார் வாகனம் கவிழ்ந்து விபத்து

October 25, 2019

கோவை தடாகம் பகுதி ராகவேந்திரா நகரில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளியின் தனியார் வாகனம் கவிழந்தது.

20 பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் வாகனம் ராகவேந்திரா நகர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஓட்டுனரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் மாணவர்களுக்கு பெரும் சேதாரம் இல்லாமல் தப்பினர். அப்பகுதி மக்கள் அப்பகுதியில் சாலை வசதி இல்லாததே இதற்கு காரணம் என்றும் பல வருடங்களாக சாலை அமைத்து தர படாமலே அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் கூறினர்.

மேலும் தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதியும் இல்லாததால் இரவில் பாம்புகள் யானைகள் போன்றவற்றின் தொல்லைகள் இருப்பதால் வெளியில் வருவதற்கும் அச்சமாக உள்ளது என்று தெரிவித்தனர். இது பற்றி பல முறை மனுக்கள் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினர். அப்பகுதி மட்டுமல்லாமல் அதன் அருகில் உள்ள குன்றுப் பெருமாள் கோவில், திருவள்ளுவர் நகர் ஊர்களிலும் சாலை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க