• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையால் நோய் பரவும் அபாயம் – அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு

October 22, 2019

கோவை பாப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் 2000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள குளக்கரையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குப்பையை பிரித்தெடுக்கும் சமூக கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது ஆக்கூடம் செயல்படாத நிலையில் அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குள க்கரைப்பகுதியில் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்டப்பட்டு வருகின்றனர். இறைச்சிகளை சாப்பிட வரும் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறைச்சியை கடித்து கொண்டு வீட்டின் முன் போடுவதால் மனிதனுக்கு வைரஸ் நோய் பரவுவது மட்டுமல்லாமல் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குளத்தில் உள்ள நீரில் கொசுக்கள் அதிகம் உருவாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாவட்டம் முழுவதும் ஏற்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் பலர் நோய் வாயின்றி கிடக்கும் நிலையில் நோய் பரவும் அச்சமும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி இந்த பகுதியில் கிரீமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மேலும் குளத்திலும் வாய்க்காலில் குப்பை கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க