• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவிய விஜய் ரசிகர்கள்

October 21, 2019

கோவை மாவட்ட விஜய் மாணவரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில் இன்று சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி தொகை வழங்கபட்டது.

தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பிகில் படம் வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு சேவை பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை தவிர்த்து விட்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி போன்ற சேவைப் பணியை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று கோவை 100 அடி சாலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சைக்கான உதவி தொகை வழங்கப்பட்டது.

இந்த உதவித் தொகையினை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமூக ஆர்வலர் JRD என்ற ராஜேந்திர ஜெயகோபால் அவர்கள் தலைமையில் வழங்கபட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்டதலைவர் பாபு ,தேன்குமார் ,ரியாஷ், நயீம், தளபதிகண்ணன் ,கோவை பசீர், கோவிந்தராஜ், ஷாஜஹான் ,கிரேஷ் அரவிந்த், ஜெகதிஷ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க