• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தன்னுயிர் நீத்த காவலர்கள் மூன்று பேருக்கு 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம்

October 21, 2019 தண்டோரா குழு

கோவையில் பொதுமக்கள் உயிர் காக்க தன்னுயிர் நீத்த காவலர்கள் மூன்று பேருக்கு 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆண்டு தோறும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த காவலர்களை நினைவு கூற வகையில் கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், 1985 ஆம் ஆண்டு கொள்ளை குற்றவாளியை பிடிக்கும் போது உயிரிழந்த காவலர் ராஜரத்தினம், 1997 ஆம் ஆண்டு பலி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்ட தலைமை காவலர் செல்வராஜ், மற்றும் 2011 ஆம் ஆண்டு விபத்து ஏற்படுத்தியவரை பிடிக்க முற்பட்டபோது உயிரிழந்த தலைமை காவல் சந்திரசேகரன் ஆகிய மூன்று பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரன் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இவரை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதில் மக்களுக்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க