• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் மக்கள் அவதி

October 17, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் மக்கள் அவதிகுள்ளாகினர். உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு மழை பெய்த போது இருந்தே கோவையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் விசி வருகிறது. இந்நிலையில் தினம் தினம் ஆயிரம் மக்கள் வந்து போகும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கழிவு நீர் தொட்டி ஒன்று திறந்து அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. அதில் கொசு புழுக்கள் இருந்தன இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் ஒரு எலி நடைபாதையின் அருகில் இறந்து கிடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல இடங்கள் இப்படிதான் உள்ளன. பல இடங்களில் நீர் தேங்கியும் பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தாமலும் இருக்கின்றன. இது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்ல உடனடியாக தூய்மைபடுத்த உத்தரவிட்டார். இதையடுத்து, உடனடியாக சுகாதார துறையினர் வந்து அதை தூய்மைப்படுத்தினர்.

மேலும் படிக்க