• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை அடுத்த ஆனைமலையில் அகழியினை தாண்ட முற்பட்ட யானை உயிரிழப்பு

October 17, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஆனைமலை கா.நி.சரகம் சரளபதி அருகே அகழியினை தாண்ட முற்பட்ட யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் வால்பாறை உட்கோட்டம் ஆனைமலை கா.நி.சரகம் சரளபதி அருகே வனத்துறை போத்தமடை பீட் பகுதியில் வனப்பகுதியில் உள்ள அகழியில் சுமார் 25 வயது மதிக்க தக்க ஆண் காட்டு யானை விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடதிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது,அகழியினை யானை தாண்ட முற்பட்டபோது அதன் உள்ளே விழுந்து காயம்பட்டு யானை இறந்துள்ளது என தெரியவந்தது. இதையடுத்து,வனத்துறையினர் விசாரனை முடித்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க