• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது இளம்பெண் புகார்

October 15, 2019 தண்டோரா குழு

கோவையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

கோவை அடுத்த காளப்பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி இவரது மகள் மித்ரா இவரது கல்வி செலவிற்காக வங்கியில் வீட்டு பத்திரத்தின் மீது கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனை அடைக்க கோவை ராம்நகரில் செயல்பட்டுவரும் ஸ்ரீஅசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஷ் என்பவரிடம் தங்களது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூபாய் 22 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதனை மூன்று மாதங்களுக்குள் வட்டியுடன் சேர்த்து கொடுக்கச் சென்றபோது, மேலும் ஐந்து லட்ச ரூபாய் உடன் 30 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால்தான் வீட்டு பத்திரத்தை தரமுடியும் என்று மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து 30 லட்ச ரூபாய் தயார்செய்து கொண்டு சென்றபோது 35 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை கொடுக்கமுடியும் என்று கூறியுள்ளார்கள்.ஆனால் சில நாட்களில் ராஜேஷ் மற்றும் பாண்டியராஜன் என்பவர் 3 அடியாட்களுடன் இவர்களது வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டி வெற்றுத் தாள்களில் கையெழுத்து பெற்று சென்று இவர்களது வீட்டு பத்திரத்தை மற்றொரு வங்கியில் ரூபாய் 70 லட்ச ரூபாய்க்கு அடமானமாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மித்ரா குடும்பத்தினர் ராஜேஷ் அவரிடம் கேட்டதற்கு நாங்கள் அழைக்கும் இடத்திற்கெல்லாம் வர வேண்டும், நாங்கள் சொல்வதெல்லாம் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உன்னுடைய தாயாரை கொன்றுவிடுவோம் என்று போனிலும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலமாகவும் மிரட்டி வந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணும் அவரது தாயாரும் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க