• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய முற்போக்கு திராவிட ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை மனு

October 14, 2019 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் சமீப காலங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பும், ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கோவை மாவட்ட தேசிய முற்போக்கு கழக செயலாளர்கள் காட்டன் செந்தில்,எஸ் எம் முருகன்,தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க