• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி குழந்தைகள் ஹெல்மெட் அணிந்தபடி விழிப்புணர்வு

October 12, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளி குழந்தைகள் ஹெல்மெட் அணிந்தபடி சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக அளவில் தினந்தோறும் சாலை விபத்துக்களும் உயிரிழப்பும் அதிகம் ஏற்படுகிறது.இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மொபைல் ஃபோன்களின் பயன்பாட்டினாலும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் இருப்பதினாலும் , உயிரிழக்கின்றனர். எனவே, சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், குறிப்பாக ஹெல்மெட் மற்றும் மொபைல் ஃபோன் பயன்பாட்டால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் NCC மாணவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், காவல்துறை சார்பாக இன்று சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் 3கிலோ மீட்டர் தூரம் வரை பேரணியாக சென்று வாகனத்தில் செல்லும் மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க