• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விஜயதசமியை முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி

October 8, 2019 தண்டோரா குழு

கோவையில் விஜயதசமியை முன்னிட்டு தெலுங்கு தேவாங்க செட்டியார் பிரிவை சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டோரால் கத்தி போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை சுக்கிரவார் பேட்டையில் தொடங்கி ராஜவீதி வழியாக கோவை ஐந்து முக்கில் உள்ள செளடாம்பிகை கோவில் வரை தேவாங்க செட்டியார் இளைஞர்கள் கத்தி போட்டுக்கொண்டு தீஸ்க்கோ தள்ளி என்ற வார்த்தையை கூறிக்கொண்டே சென்றனர்.

இந்நிகழ்ச்சியை பற்றி செளடாம்பிகை கோவில் தலைவர் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு பராக்கத்தி விழா நடைபெறும் என்றும் செளடேஸ்வரி அம்மனை மாவு கலசத்தில் வைத்து அழைத்து வருவோம் என்றும் ஆண்டிற்கு ஆண்டு இளைஞர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் விரதம் இருந்து கத்தி போட்டு விரதத்தை கலைத்து கொள்வர் என்றும் இதில் முக்கிய நிகழ்வாக மஞ்சள் பொடி போடும் நிகழ்வு என்றார்.

20 க்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களால் ஆன மஞ்சள் பொடி தூவும் நிகழ்வு என்றார். இந்த பொடி கத்தி பட்ட காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க