• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த சோதனையில் 500 க்கும் மேற்பட்ட ஆர்.சி புத்தகங்கள் பறிமுதல்

October 5, 2019 தண்டோரா குழு

கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 1.80 லட்சம் பணம் உள்பட 500 க்கும் மேற்பட்ட ஆர்.சி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை துடியலூர் பகுதியிலுள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் சுமார் நான்கு மணி நேரமாக இந்த சோதனையானது நடைபெற்றது.இந்த சோதனை முடிவில் கணக்கில் வராத 1.80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் 70 ரூபாய் இடைத்தரகர்களால் தூக்கியெறியப்பட்ட பணப்பை(மணி பர்ஸ்) மற்றும் கவர்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மீதமுள்ள பணம் அலுவலுக ஊழயர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆர்சி புத்தகங்களும் 200-க்கும் மேற்பட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அலுவலகம் மூடிய பிறகு புரோக்கர்களுக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் என்ன வேலை? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரவேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாக அவர் திரும்பி வந்தவுடன் குமாரவேலிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த சோதனையில் ஒரு மோட்டார் போக்குவரத்து அலுவலர் விசாரணையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இடைத்தரகர்கள் 22 பேர்,அலுவலக ஊழியர்கள் 8 பேர்,மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க