• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV கூடுதல் சார்பு நீதிமன்றம் திறப்பு

October 4, 2019 தண்டோரா குழு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV கூடுதல் சார்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்து வைத்தார்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல விதமான வழக்குகளை விசாரிக்க உரிமையியல், குற்றவியல், கிருமினல், சிபிஐ, நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. மேலும் கோவை நீதிமன்றத்தில் தினமும் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக பலதரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இதே சூழ்நிலை நிலவி வருகிறது இதனால் நீதிமன்றங்களை அதிகப்படுத்தி வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதி துறை பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதியதாக நீதிமன்றங்கள், மற்றும் சார்பு நீதி மன்றங்கள் திறக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV வது கூடுதல் சார்பு நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது.

நீதிமன்றத்தை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் படிக்க