• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த கோ க்ரீன் எனும் பசுமை விழிப்புணர்வு

October 4, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கோ க்ரீன் எனும் பசுமை விழிப்புணர்வு கொலு பொம்மைகள் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தன.

நவராத்திரி பண்டிகை புரட்டாசி மஹாளய அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் சிறப்புகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் அறிந்து கொள்ளும் விதமாக கோவை ஜி.ஆர்.டி.கல்வி நிறுவனங்கள் சார்பாக சந்திரகாந்தி சர்வதேசபள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் அழகிய பொம்மைகள், இறை உருவங்கள், அனைத்து வகை உயிரினங்கள், என பூமியில் பரவி கிடக்கும் பெரிய மற்றும சிறிய உயிரினம் மற்றும் பயன்பாட்டு பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு பிரிவிலும் மாணவிகளின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் கைவண்ணங்களில் உருவாக்கிய பொம்மைகள் கொலுவில் பிரதான இடம் பிடித்தன.குறிப்பாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அழகிய மலர்செடிகள், சிறு புல் செடிகள், விவசாய நிலம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ளும் உருவங்கள் ,மலை முகடுகள் நிறைந்த கோயில் தலங்கள் மலைகளின் ஓரப்பகுதிகளில் அருவிகள் விழுவது போன்ற இயற்கை அமைப்புகள் என வித்தியாசமான என்றவாறு பசுமை கொலு பொம்மைகள் அதிகம் கவரப்பட்டது.விழாவில் ஒரு பகுதியாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் அம்பிகை பாடல்கள் பாடி நடனம் ஆடினார்.

இது குறித்து பள்ளியின் தாளாளர் நந்தினி ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நவராத்திரி பண்டிகையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் தெரிந்து கொள்ளும் விதமாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக எங்களது கல்வி குழுமத்தின் சார்பாக இந்த விழா நடத்தப்படுவதாக தெரிவித்தார். விழாவில் பள்ளி முதல்வர் கருணாம்பிகை மற்றும் ஆசிரியைகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க