• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்

October 3, 2019 தண்டோரா குழு

கோவையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட தலைவர் நந்தகுமார் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் கோவை மாவட்டத்திலுள்ள பல மாற்றுக் கட்சியினர் தினந்தோறும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் 56 ஆவது வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களை கோவை தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் முன்னிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்

இதுகுறித்து மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறும்போது,

அரசியலில் தூய்மையும் நேர்மையும் உள்ள கட்சியாக பாஜக திகழ்வதாகவும் வாரிசு அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த கட்சி திகழ்வதால் அனைவரும் விரும்பி பாஜகவில் இணைகின்றனர் என்று கூறினார் இந்த நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரை மோகன்ராஜ் மாவட்ட துணை தலைவர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கூடி இருந்தனர்.

மேலும் படிக்க