• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கோவையில் கைது

October 1, 2019 தண்டோரா குழு

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர் வள்ளுவர் நெடும் பாறையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 34. இவர் மீது சென்னை மாநகர பகுதிகளில் கொலை கொலை முயற்சி கொலை மிரட்டல் ஆள் கடத்தல் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட 36 வழக்குகள் உள்ளது. சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இவரை என்கவுண்டர் செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ராதாகிருஷ்ணன் சென்னையிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்துள்ளார் இந்த நிலையில் போலீசார் தமிழகம் முழுவதும் ராதாகிருஷ்ணன் எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்து ரகசியமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவதாக சென்னை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை போலீசார் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த ராதாகிருஷ்ணனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் சிக்கிய தகவல் குறித்து சென்னை அரும்பாக்கம் போலீசாருக்கு சிங்காநல்லூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் அவர்கள் கோவைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் வந்ததும் பிரபல ரவுடி ராதாகிருஷ்ணனை சிங்காநல்லூர் போலீசார் அரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர் மேலும் தற்போது சிக்கியுள்ள பிரபல ரவுடி ராதாகிருஷ்ணனை போலீசார் என்கவுண்டர் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க