• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 28, 2019

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்த 1800 மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர் நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக யு.ஜி.சியின் கூடுதல் செயலர் டாக்டர் தேவ் ஸ்வரூப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இன்று கல்லூரி படிப்பை முடித்து வாழ்க்கையை துவங்கும் மாணவிகள் இனி வரும் பல்வேறு கட்டங்களில் எதிர் கொள்ளும் சவால்களில் வெற்றி பெற்று முன்னேற வேண்டும். நாடு முழுவதும் தற்போது 900 யுனிவர்சிட்டிகளும் 42,000 கல்லூரிகளும் திறம்பட செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 41 மாணவிகள் உட்பட 1800 இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க