• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயகோபால் கைது

September 27, 2019 தண்டோரா குழு

பேனர் விழுந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ(23) . இவர் கடந்த 12ம் தேதி தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக,அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் மாநகராட்சி அதிகாரிகள் வைத்ததனர்.இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில்,ஜெயகோபால் தலைமறைவானார்.அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், ஒரு வாரத்துக்கு மேலாக காவல்துறை தேடி வந்த நிலையில் கிருஷ்ணகிரியில் ஜெயகோபலை போலீசார் இன்று கைது செய்தனர்.

மேலும் படிக்க