• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்ணை துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

September 26, 2019 தண்டோரா குழு

கோவையில் பெண்மணி ஒருவரை நகைக்காக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை, அவிநாசிரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில்,கடந்த 2013 ஆம் ஆண்டு, சரோஜினி என்ற 54 வயது பெண்மணி, துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த, யாசர் அராபத் என்பவரை, விசாகப்பட்டினத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி யாசர் அராபத்திற்கு, தடயங்களை அழித்ததற்காக 7ஆண்டுகள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும், கொள்ளைக்காக 7ஆண்டுகள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க