• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வழக்கு நிலுவையில் இருக்கும் போது கேங்மேன் பணி நேர்காணலுக்காக கோவை மின்வாரியத்தில் மின் கம்பங்கள் நடப்படுவதாக குற்றச்சாட்டு

September 26, 2019 தண்டோரா குழு

கேங்மேன் பணிக்கு வெளி ஆட்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கோவை மின்வாரியத்தில் கேங்மேன் பணி தொடர்பாக நேர்காணல் நடத்துவதற்காக மின் கம்பங்கங்கள் நட்டப்படுவதாக தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்கிட வேண்டும் என்பது தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இது குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில்,

“தமிழகம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் 2008-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பணியும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு செய்வதில்லை என அதிகாரிகள் அரசுக்கு தகவல் அனுப்புகின்றனர். 1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 2 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின் பணிகளை செய்து வருகிறோம். புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மின் கம்பங்களை சீர் செய்வது என அனைத்து மின் பணிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் ஆனால் எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை.

மேலும் கேங் மேன் (gang man)என்கிற பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களை வேலை எடுக்க போவதாக கூறுகிறார்கள், இவ்வுளவு ஆண்டு காலம் பணிபுரிந்த எங்களுக்கு முன்னுரிமை தந்துவிட்டு அந்த பணிகளுக்கு ஆள் எடுக்க வேண்டும். கேங் மேன் பணிக்கு ஆள் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. ஆனால் கோவை மின்வாரியத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது இது தொடர்பாக எந்த ஒரு பணியும் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம் தடையானை பிறப்பித்திருக்கும்போதே கேங்மேன் பணிக்கு ஆள் எடுப்பதற்காகவும் அவர்களுக்கு நேர்காணல் நடத்துவதற்காகவும் தற்போது மின்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது,” மற்றும் நீதிமன்ற அவமதிப்பு என்றார்கள்.

மேலும் படிக்க