• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானப்போக்குவரத்து தனியார் மயமாக்குவதை கண்டித்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

September 25, 2019 தண்டோரா குழு

மத்திய அரசு இந்திய விமான நகர் ஆனைகுளம் உங்களுக்கு சொந்தமான விமான நிலையங்களை தனியார் மயமாக்கி வருகின்றன. அகமதாபாத் லக்னோ ஜெய்ப்பூர் கௌஹாத்தி மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு கொடுத்து விட்டது. தற்போது இதன் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது மேலும் அமிர்தசரஸ் புவனேஸ்வரம் கோயம்புத்தூர் இந்தூர் கோழிக்கோடு பாட்னா ராய்ப்பூர் ராஞ்சி திருச்சி மற்றும் வாரணாசி ஆகிய 10 விமான நிலையங்களை தனியார்மயம் ஆக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களிலும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் விமான நிலையம் முன்பு உள்ள கொடிக் கம்பத்தின் கீழ் கூடாரம் அமைத்து விமான நிலைய வளாகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று கொடிக் கம்பத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தி போராட்டத்தை துவக்கியுள்ளனர் இந்தப் போராட்டமானது தொடர்ந்து 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது போராட்டத்தை ஒட்டி தொடர்ந்து மூன்று நாட்களும் எந்த விதமான பணிகளையும் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,

மத்திய அரசிற்கு லாபம் தரும் இந்தத் துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் பணியை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் விமான சேவையை முற்றிலும் முடங்கச் செய்யும் அளவிற்கு எங்களது போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்றனர்.

மேலும் படிக்க