• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவர் மருத்துவமனையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

September 25, 2019 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவர் மருத்துவமனையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 49), அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக இயன்முறை மருத்துவர் ஆக பணியாற்றி வருகிறார். அவர் இன்று வழக்கம்போல மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். அப்பொழுது மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென மயங்கி தரையில் விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தூக்கிக் கொண்டு வந்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பழனிசாமிக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

திடீர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர். மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அங்கு உள்ள டாக்டர்கள் இடையே சோகத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க