• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம் – ப.சிதம்பரம்

September 24, 2019 தண்டோரா குழு

“பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அவரது பிறந்த நாளன்று பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் ப.சிதம்பரத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி செப்.16ம் தேதி எழுதிய மடலை ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: “என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி” என்று கூறியதோடு அடுத்தடுத்த ட்வீட்களில், “பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே? தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க