• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிவி. சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி 75 வயது முதியவர் மனு

September 17, 2019

இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.சமீபத்தில்உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இந்தியா மட்டுமின்றி இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மலைச்சாமி, பி.வி.சிந்துவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த மனுவை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், விளையாட்டுத்துறையில் தீராத ஆர்வம் கொண்ட தான், பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவை காதலித்து வருகிறேன். பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன். அந்த வீராங்கனை எங்கிருந்தாலும் விடப்போவதில்லை. அவரை தூக்கி வந்தாவது திருமணம் செய்வேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க