• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உங்களால் சப்தமாக ‘டர்’ விட முடியுமா? இதோ உங்களுக்கான போட்டி !

September 16, 2019 தண்டோரா குழு

ஒரு இடத்தில் நான்கைந்து பேர் வெகுநேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் திடீரென்று ஒருவித துர்நாற்றத்தால் அனைவரும் சங்கடத்தில் நெளிவதை பார்க்கலாம். ஆனால் அந்த டர் விட்டவர் யார் என்று யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அந்த ‘வாயு உபத்திரம்’ தொடர்பான துர்நாற்றத்துக்கு காரணமானவர் ஒருவராக இருக்கலாம். அவர் யார்? என்பதை கண்டுபிடிப்பதை, சீட்டு எழுதிப்போட்டு விளையாடும் ‘திருடன்-போலீஸ்’ ஆட்டத்தைவிட மிக சிக்கலானதாக இருக்கும்.இன்னும் சிலர் இந்த உலகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொது இடத்தில்கூட மிகுந்த ஓசையுடன் தங்களது வாயு உபத்திரத்தை வெளிப்படையாக தீர்த்துக் கொள்வதுண்டு.

மலக்குடல் வழியாக வாயு வெளியேறுவது என்பது சில நேரங்களில் மனிதரால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் பிரச்சனைகளுள் ஒன்றாகும். எனினும் இது போன்ற இக்கட்டான தருணங்களில், நம் அருகில் இருப்பவர்கள் இதனை கேலியாகவும், ஏளனமாகவும் பார்ப்பதுண்டு. இது போன்ற நிலையை ஏறக்குறைய அனைவருமே கடந்துதான் வந்திருப்போம். இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு உணவகம் வரும் 22-ம் தேதி ‘வாயு உபத்திரம்’ தொடர்பாக ஒரு பெரிய போட்டியை வைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த போட்டி குறித்த அறிவிப்பை சூரத் நகரைச் சேர்ந்த Yatin Sangoi மற்றும் Mul Sanghvi என்ற நண்பர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். வரும் செப்டம்பர் 22ம் தேதி இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதற்கான நடுவர்கள் குழுவில் ஒரு டாக்டரும் இடம்பெற்றுள்ளார்.

இப்போட்டி குறித்து அவர்கள் கூறுகையில்,

3 வகைகளில் இப்போட்டி நடத்தப்படும், ஒவ்வொரு போட்டியாளருக்கும் 60 நொடிகள் கொடுக்கப்படும் இதற்குள் அவர்களின் திறனை வெளிப்படுத்த வேண்டும். இப்போட்டியின் நடுவராக நகைச்சுவையாளர் தேவங் ராவல் செயல்படுவார். அவருடன் ஒரு மருத்துவரும் இதனை கண்காணிப்பார்.3 பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சுழற்கோப்பைகள் வழங்கப்படும், ஒரு வேளை ஸ்பான்சர் கிடைத்தால் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரையில் ரொக்கப்பரிசு தரப்படும் எனவும் தெரிவித்தார். இப்போட்டிக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க