• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரசவத்தின் போது தாய் இறந்ததால் சோகம் – கோவையில் ஆண் குழந்தை ₹7500 க்கு விற்பனை

September 13, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூரில், பிறந்த ஆண் குழந்தை 7500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான அருள்செல்விக்கு திருமணம் ஆகாத நிலையில்,கடந்த ஆறாம் தேதி அன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்தின் போது குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார்.இதையடுத்து, அவரது உடலை அவருடைய அக்கா கணவரான ஆனந்தராஜ் சொந்த ஊரான நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஆனந்தராஜ், பிறந்த குழந்தையை, ராஜன் – செல்வி என்ற தம்பதிக்கு, 7500 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ராஜன் செல்வி தம்பதி,அந்தக் குழந்தையை,அவினாசிப்பாளையத்தைச் சேர்ந்த மணிமேகலை என்ற உறவினரிடம் வளர்க்க கொடுத்துள்ளனர்.இதற்கிடையில்,குழந்தை விற்பனை குறித்து தகவலறிந்த சைல்ட் லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் உமா தேவி,ஆலோசகர் ஜோசப் ரகுமான் கென்னடி உள்ளிட்டோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் குழந்தையை வாங்கிய செல்வியுடன் விசாரணை நடத்தினர்.அருள்செல்வியின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாததால் தான் குழந்தையை விற்றதாக ஆனந்தராஜ் வாக்குமுலம் அளித்துள்ளார்.காவல்துறை விசாரணையில் அருள்செல்வி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குழந்தையின் தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க