• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் அத்தையை பார்க்கணும் அனுமதியுங்கள் – முதல்வரின் அண்ணன் மகள் வேதனை

October 6, 2016 தண்டோரா குழு

என் அத்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது அவரை பார்க்க அனுமதியுங்கள் என முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு கிட்டத்தட்ட 13 நாட்கள் ஆகிறது. முதல்வர் நலமாக இருக்கிறார் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் தான் இருந்து வருகிறார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. முதல்வரை சந்திக்க செல்லும் தலைவர்களும் அவரை சந்திக்காமல் மருத்துவர்கள் அல்லது அமைச்சர்களை சந்தித்து தான் வருகிறார்கள். எனினும், அவரது உறவினர்கள் யாரும் அவரை பார்த்தார்களா என்பது குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் வசித்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா முதல்வரை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால்,மருத்துவமனையின் கேட்டிலேயே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தீபா ஜெயக்குமார் கூறும் போது, அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டு அவரை சந்திப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றேன். என் அத்தை என்மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருக்கிறார். அவரை பார்த்து ஆறுதல் சொல்வதற்காக மூன்று நாட்களாக மருத்துவமனைக்கு சென்று வருகிறேன். ஆனால், என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

ஆகையால்,அத்தையை பார்க்காமல் செல்ல மாட்டேன் என கூறியதையடுத்து அதிமுக நிர்வாகிகளிடம் என்னைப் பற்றிக் கூறி, எனக்கு ஜெயலலிதாவை பார்க்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.ஆனால், இதுவரை எனக்கு எந்தவிதமான அனுமதியும் கிடைக்கவில்லை என்றார்.

மேலும், “என் அப்பா ஜெயக்குமார் உயிரிழந்த போது அத்தை ஜெயலலிதா வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்” என்று அவரை நினைவு கூரும் தீபா, என் அத்தையின் உடல்நிலை தற்போது எவ்வாறு உள்ளது என்று கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்று வேதனையோடு கூறியுள்ளார்.

மேலும் படிக்க