• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி

September 9, 2019 தண்டோரா குழு

தென் இந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராணுவ தென்பகுதி லெப்டினன்ட் ஜெனரல் கமாண்டர் எஸ்.கே. சைனி கூறும்போது,

சர் கிரீக் ஒட்டிய கடல் பகுதியில் கேட்பாரற்று சில படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து யாரும் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனரா என ஆராயப்பட்டு வருகிறது. ராணுவம் முழு அளவில் எதனையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. சதித்திட்டம் ஏதும் இருந்தால் அது சரியான வழியில் முறியடிக்கப்படும் என கூறியுள்ளார். கடந்த 2008ல் செப்.26 ல் மும்பையில் நடந்த தாக்குதல் போல் ஏதும் நடக்கக்கூடுமோ என்ற அச்ச சூழல் எழுந்துள்ளது. படகில் இருந்து வந்தவர்கள் அரபிக்கடல் வழியாக நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து குஜராத், மகாராஷ்ட்டிரா, ஆந்திரா, கர்நாடாகா, தமிழகம், கேரள பகுதிகளில் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்றதாக போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, தென் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கலாம் என வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க