• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருகின்ற 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் – தபெதக அறிவிப்பு

September 7, 2019 தண்டோரா குழு

கேரள அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் வருகின்ற 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவை மக்களின் முக்கிய நீராதரமான சிறுவாணி அணையின் உயரம் 50 அடியாக உள்ளது. கேரள அரசு சிறுவாணி அணையில் 42 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்கிறது. அதற்கு மேல் தண்ணீரை தேக்காமல் திறந்து விடுகிறது.அணையில் தண்ணீரை முழு கொள்ளவை எட்ட விடாமல் தண்ணீரை கேரள அரசு வீணாக்குகிறது. இதனால் கோவையில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.தமிழக மக்களை கேரள அரசு வஞ்சிக்கிறது. 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும்.கடந்தாண்டு 3 முறை சிறுவாணி அணை நிரப்பிய போதும், கேரளாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழக அரசு தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.கேரள அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் வருகின்ற 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் படிக்க