• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளியின் 100வது நாள் விழாவில் நூறு விதமான விளையாட்டுகளை காட்சிபடுத்திய மாணவ,மாணவிகள்

September 7, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளியில் நடைபெற்ற இந்த கல்வி ஆண்டிற்கான 100 வது நாள் விழாவில் நூறு விதமான விளையாட்டு மற்றும் உணவு வகைகளை மாணவ,மாணவிகள் காட்சிபடுத்தியிருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கோவை ஜி.என்.மில்ஸ் சுப்ரமணியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் அன்னை வயலெட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருடாவருடம் கல்வி ஆண்டில் 100வது நாள் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எல்லா பள்ளிகளிலும் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா என கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த பள்ளியில் மட்டும் பிரத்யேகமாக 100 வது நாள் விழாவை கடந்த 10 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 100 வது நாள் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் இணை செயலாளர் பிரேம்சந்த் தலைமையில் நடைபெற்ற இதில் பள்ளி முதல்வர் திருமதி அன்புவடிவு முன்னிலை வகித்தார்.விழாவில் மாணவ,மாணவிகள் அவர்களே உருவாக்கிய 100 விதமான விளையாட்டுக்களை பள்ளி வகுப்பறையில் காட்சி படுத்தியிருந்தனர்.இதில் ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்து விளையாடும் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் 100 வகையான தமிழக பாரம்பரிய உணவுகள் உட்பட பல்வேறு வகையான உணவுகளும் இதில் இடம் பெற்றிருந்தன.இது குறித்து பள்ளியின் இணைசெயலாளர் பிரேம்சந்த் பேசுகையில், விடுமுறைகள் முடிந்து பள்ளி துவங்கி நூறாவது நாள் விழாவாக எங்களது பள்ளியில் பிரத்தியேகமாக தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இந்த விழாவை நடத்தி வருவதாகவும் இதனால் மாணவ-மாணவிகளின் பன்முக திறமையை வளர்த்து அவர்களுக்கு கல்வி மட்டும் அல்லாது பல்வேறு திறமைகளை இதன்மூலம் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார்.விழாவில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க