• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோமியம், விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும் – மத்திய சுகாதர துறை இணை அமைச்சர்

September 7, 2019 தண்டோரா குழு

“புற்று நோய்க்கு எதிரான போர் “என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மத்திய சுகாதர துறை இணை அமைச்சர் அஷ்வின் குமார் சவ்பே இன்று கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கோமியம், விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும், அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா சித்தா போன்றவற்றை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம். நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்தவ சீட்டுகள் கிடைக்கும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.இதே போல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.சேலம், மதுரை,தஞ்சாவூர் ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகளில் மருத்துவ சீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும், நீட் தேர்வு ரத்து குறித்து கேள்விக்கு அரசு எல்லோருக்கும் தேவையான நல்லதையே செய்யும் என்றார்.

மேலும் படிக்க