• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

September 7, 2019 தண்டோரா குழு

கோவைமாவட்டம் டாட்டாபாத் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பனை மிரட்ட செய்த போன், தவறாக கோவை வந்துள்ளது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மோகன் தாஸ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இவருக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து அவர் கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணை விசாரித்தபோது இந்த வெடிகுண்டு மிரட்டல் பொய் எனவும் தெரியவந்தது.

மேலும் போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஆண்டிப்பட்டியில் சேர்ந்த சிறுவன் எனவும் தெரியவந்துள்ளது.மேலும் இதுபற்றி விசாரித்த காட்டூர் காவல் நிலைய போலிசார் சிறுவனின் பெற்றோரிடம் நிகழ்வு குறித்து எடுத்துரைத்தனர். சிறுவன் என்பதால் போலிசார் அன்பாக பேசி இதுபோன்று செயல்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க