• Download mobile app
22 Oct 2025, WednesdayEdition - 3542
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வர் உடல் நலம் பெற தர்பூசணி பழத்தில் ஓவியம்

October 6, 2016 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த யு.எம்.டி. ராஜா தர்பூசணி பழத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவ படத்துடன் மூன்று மத வழிப்பாட்டுடன் கைகூப்பி வணங்குவது போல் ஓவியம் வரைந்து முதல்வர் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் உடல் நலம் குணமாகி மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்து தரப்பு மக்களும் முதல்வர் உடல் நலம் பெற வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை குணியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் நகைப்பட்டறை தொழிலாளியான யு.எம்.டி. ராஜா (வயது 46 ).முதல்வர் உடல் நலம் பெற 2 கிலோ மற்றும் 3 கிலோ தர்பூசணி பழத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் மற்றும் மூன்று மத வழிப்பாட்டுடன் கைக்குப்பி வணங்குவது போல் ஓவியம் வரைந்துள்ளார்.

இது குறித்து ராஜா கூறுகையில்,

இரு தர்பூசணி பழத்தில் ஓவியம் வரைய சுமார் 18 மணி நேரம் ஆனது. இது போன்ற தமிழக முதல்வரின் பல திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் 1gm தங்கத்தில் பல ஓவியங்களை வரைந்துள்ளேன். 1998 முதல், காந்தி பிறந்த நாள், சுதந்திரம் தினம், சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த நாளில் அவர்களது உருவ படத்தை தங்கத்தில் வரைந்து வெளியிட்டுள்ளேன். மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்போது தமிழக முதல்வர் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என தர்பூசணி பழத்தில் ஓவியம் வரைந்துளேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க