• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள் – ஸ்டாலின்

September 1, 2019

தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசை சவுந்திரராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தர ராஜனும், மகாராஷ்டிர மாநில கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி, இமாச்சல பிரதேச கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா, கேரள கவர்னராக ஆரிப் முகமது கான்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள். அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழிசைக்கு வாழ்த்துகள் தெரிவித்த தூத்துக்குடி எம்பி கனிமொழி, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசைக்கு வாழ்த்துகள். தெலங்கானா மக்களுக்காக தமிழிசை சிறப்பாக பணியாற்றுவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க