• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அபராதம் பலமடங்கு! புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமல்

August 31, 2019 தண்டோரா குழு

இந்தியாவில் 1939 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் முதன்முறையாக 1988 ஆம் அண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் சில மாறுதல் செய்யப்பட்டது. அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதால், அதனை கட்டுப்படுத்தவும், உயிர் இழப்பை தடுக்கவும் பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், புதிய சட்டப்படி போக்குவரத்து விதிகள் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமலுக்கு வருகிறது.

2019 மோட்டார் வாகன (திருத்த) மசோதாவில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? எவ்வளவு அபராதம்?

•ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிப்பது

•ஓட்டுநர் உரிமம் காலவதியாகி ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரு ஆண்டாக உயர்த்துவது.

•தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதி

•மோட்டார் வாகன விபத்தில் மரணமடையும் வாகன உரிமையாளரோ அல்லது காப்பீடுதாரரோ ரூ.5 லட்சம் இழப்பீடும். வாகன விபத்தில் படுகாயம் அடைபவர் ரூ.2.5 லட்சம் இழப்பீடும் பெறுவார்.

போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் அதிகரிப்பு

•தற்போதைய நிலவரப்படி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் ரூ.100, அதுவே திருத்தப்பட்ட மசோதாவின் படி ரூ.500 ஆக அதிகரிப்பு.

•ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5,000.

•காப்பீட்டு நகல் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம்.

•அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். மசோதாவின் படி, அதிக வேகத்தில் ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

•வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்

•ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

•சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவனது பாதுகாவலனும் வாகனத்தின் உரிமையாளரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும்.

•வாகனங்களில் அதிக அளவில் சுமை கொண்டு சென்றல் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கலாம்.

•ஓட்டுநர் உரிம நிபந்தனைகளை மீறியதற்காக ரைடு-ஹெயிலிங் திரட்டிகளுக்கு ரூ.1 லட்சம் அபாரதம்.

•அதிவேகமாக வாகனம் ஓட்தினால் அபராதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விதிக்கப்படும்.

•குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க