• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஏழாம் வகுப்பு சிறுவனின் அடுர்னோ தொழில்நுட்ப கார்

August 31, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு சிறுவனின் அடுர்னோ தொழில்நுட்ப கார் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் விதமாக கோவை கொடிசியா அரங்கில் அறிவியல் கண்காட்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்ட இந்த அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவனும் தன்னுடைய படைப்பை இந்த கண்காட்சியில் காட்சிபடுத்தி உள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கோவை காந்திபுரம் சுகுணா சர்வதேசபள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் விவேக் கிருஷ்ணன்,தேசிய அளவிலான யோகா சாம்பியனான இச்சிறுவன், சிறு வயது முதலே பல்வேறு அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு பல தொழில் நுட்ப படைப்புகளை உருவாக்கியுள்ளான். இந்நிலையில் இச்சிறுவன் அடர்னோ தொழில் நுட்பத்தில் ப்ளூடூத்தில் இயங்கும் சிறிய வகை காரை வடிமைத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இரண்டாயிரம் படைப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த ப்ளூ டூத்தில் இயங்கும் காரை தன்னுடைய செல்போன் மூலமாக இணைத்து செல்போன் மூலமாக கட்டுபடுத்தி தானாக இயங்கும் வகையில் இதனை வடிமைத்துள்ளதாகவும், இதற்காக அண்ணா பல்கலைகழகத்தில் தாம் பயிற்சி பெற்றதாகவும், மேலும் தமக்கு தங்க கிருஷ்ணன் சில தொழில்நுட்ப உதவிகள் செய்ததாகவும் தெரிவித்தார். இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக பெரிய வகை கார்களையும் தானாக இயங்கும்படி வடிவமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் கல்லூரி மாணவர்களுக்கு இணையாக தன்னுடை படைப்பை அறிவியல் கண்காட்சியில் காட்சி படுத்தியிருந்தது அறிவியல் கண்காட்சி காண வந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க