• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் உறுதி

August 30, 2019 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற கல்லூரி மாணவ,மாணவிகள் உறுதி ஏற்றனர்.

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்ற பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமையில் நடைபெற்ற இதில், மாணவ மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நின்றனர்.

தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களினால் தீமைகளை எடுத்து கூறி துணிப்பைகளை உபயோகப்படுத்துவோம் எனவும், பிளாஸ்டிக் இல்லா நகரம் அமைப்பதோடு, முதல் கட்டமாக கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் இல்லா பகுதயாக மாற்ற அனைவரும் முயற்சி செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.

மேலும் படிக்க