• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

August 29, 2019

கோவையில் ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உமர் பாரூக், சனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர் , சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்ததால் ஹய் அலாட் கொடுக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கும் தமிழகத்தில் புகுந்த தீவிரவாதிகளுடன் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் இவர்கள் அனைவரும், இதற்க்கு முன்னும் மத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் சிக்கி விசாரனைக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலையில் ஜனாபர் அலி கோவை உக்கடம், வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர், இவர்வீட்டில் முதன் முறையாக சோதனை நடப்பதாக தெரியவருகிறது.

மேலும் படிக்க