காவிரி நீர் பிரச்சனையில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தமிழகம் – கர்நாடகம் இடையே போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சினையால் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் தமிழக – கர்நாடகா இடையேயான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.இதனால் கடந்த 30 நாட்களாக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படாமல் இருந்தது. அதே போல கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் தமிழக அரசு பஸ்களும் பெங்களூருக்கு இயக்கப்படாமல் இருந்தது. தமிழக எல்லையுடன் நிறுத்தப்பட்டது.அதே போல கர்நாடக மாநில பஸ்கள் அந்த மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயங்கி வந்தது. ஓசூருக்கு இயக்கப்படவில்லை.இருமாநில எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடந்து சென்று கடக்கும் நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு பஸ்கள் 30 நாட்களுக்குப் பின் ஒசூர் வழியே கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டன.இதேபோல் கர்நாடக அரசுப் பேருந்துகளும் 22 நாட்களுக்குப் பின் இயக்கப்படுகின்றன.
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
172 நகரங்களில் 300 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களுடன் புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ இந்தியா எட்டியுள்ளது
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டொயோட்டா 5வது தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய கேம்ரி ஹைப்ரிட்டின் அனுபவமிக்க வாடிக்கையாளர் பயணத்தை ஏற்பாடு செய்தது
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்