• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க CBI-க்கு நீதிமன்றம் அனுமதி!

August 22, 2019 தண்டோரா குழு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ கோரியபடி 5 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்தது. இதற்கிடையில், இன்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல், ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதற்காக சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். சிதம்பரம் சார்பில், கபில்சிபல், அபிஷேக் சிங்வியும், சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜரானார்கள். சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், குடும்பத்தினர் தினமும் சிதம்பரத்தை 30 நிமிடம் சந்திக்கவும் அனுமதி வழங்கினார். மீண்டும் வரும் ஆக., 27(திங்கட்கிழமை) ஆஜர்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து சிதம்பரத்தை ஒரு வெள்ளை நிற காரில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். மேலும் சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்தது. சிதம்பரத்தை சிபிஐ அலுவலகத்துக்கு உடனடியாக அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க