• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

August 22, 2019 தண்டோரா குழு

கோவையில் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் நள்ளிரவில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் எக்ஸ் பிளாக் பகுதியை சேர்ந்தவரும் சென்னையில் வசித்து வருபவருமான வைத்தியநாதன் என்பருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரான காந்தி வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே சத்தம் கேட்டதை அடுத்து காந்தி வெளியே பார்த்த போது சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வீட்டின் வாசலில் இருந்த சுமார் 15-20 ஆண்டுகள் பழமையான சந்தனமரத்தை இயந்திரம் மூலம் வெட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காந்தி சத்தம் போட்டதை அடுத்து வெட்டிய சந்தன மரத்தை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து காந்தி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் தொடர்ந்து சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதையடுத்து சந்தன மரம் கடத்தல் கும்பலை தனிப்படை அமைத்து போலிசார் கண்காணித்து வரும் நிலையில் கும்பலாக சந்தன மரத்தை வெட்டி கடத்தும் சம்பவம் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க